காணாமற்போயிருந்த ராஜகிரிய   அதிபர்   வீடு திரும்பியதாக  பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

காணாமற்போயிருந்த ராஜகிரிய அதிபர் வீடு திரும்பியதாக பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

காணாமற்போயிருந்த ராஜகிரிய அதிபர் வீடு திரும்பியதாக பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2014 | 12:22 pm

காணாமல் போயிருந்த ராஜகிரிய ஹேவாவித்தாரண வி்த்தியாலயத்தின் அதிபர் நேற்றிரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

ஐந்து தினங்களுக்கு முன்னர் குறித்த அதிபர் காணாமற்போனதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் நேற்றிரவு அவர்    வீடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பாக அதிபரின் உறவினர்கள்  பொலிஸாருக்கு அறிவித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

தற்போது அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்