காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முரளி தியோராவின் மறைவுக்கு பாரதப் பிரமர் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முரளி தியோராவின் மறைவுக்கு பாரதப் பிரமர் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முரளி தியோராவின் மறைவுக்கு பாரதப் பிரமர் இரங்கல்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2014 | 2:31 pm

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோராவின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நீண்டநாட்களாக சுகவீனமுற்றிருந்த முரளி தியோரா இரண்டு நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பிய நிலையில் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.

பொருளாதார பட்டதாரியான முரளி தியோரா 1977 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை மும்பை மேயராக பதவி வகித்திருந்தார்.

மும்பையின் காங்கிரஸ் கட்சித் தலைவராக 22  ஆண்டுகளாக செயற்பட்ட அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெற்றோலியத் துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்