மக்களின் சக்திக்கு இன்று பிறந்த தினம் (Video)

மக்களின் சக்திக்கு இன்று பிறந்த தினம் (Video)

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2014 | 8:53 am

எதிலும் புதுமை, என்றும் முதன்மை என்பதற்கிணங்க நேயர்களின் நாடித் துடிப்பறிந்து முதற்தரமான நிகழ்ச்சிகளை படைத்துவரும் சக்தி எப்.எம். வானொலி தனது 16 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றது.

சத்தி எப்.எம். இன் 16ஆவது பிறந்த நாளை முன்னிட்டு எம்.ரீ.வி/எம்.பி.சி தலைமை காரியாலய கேட்போர் கூடத்தில் விசேட நிகழ்வொன்று இன்று நடைபெற்றது.

16ஆவது பிறந்நாளை கொண்டாடும் சக்தி எப்.எம் தனது அடுத்த இலக்காக நூலகங்களை வளப்படுத்தும் செயற்றிட்டத்தை தனது பிறந்த நாளில் இன்று ஆரம்பித்தது.

”ஒரு நூல் கொடுப்போம், புது யுகம் படைப்போம்” எனும் தொனிப்பொருளில் மக்களின் சக்தியான சக்தி எப்.எம். இந்த செயற்றிட்டத்தை இன்று ஆரம்பித்தது.

இந்த திட்டத்தின் மூலம்,நூலகங்களுக்கு பயனுள்ள நூல்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான ஆரம்ப நிகழ்வு, எம்.டி.வி எம்.பி.சி தலைமை காரியாலய கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது எம்.ரீ.வி/எம்.பி.சி ஊடக வலையமைப்பின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இன்று பிறந்த தினத்தைக் கொண்டாடும் சக்தி எப்.எம்மிற்கு நியூஸ்பெஸ்ட் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்