22 அமைச்சுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

22 அமைச்சுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

22 அமைச்சுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 7:09 pm

உயர் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில், கல்வித் துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கில விராஜ் காரியவசம் இன்று பாராளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

தலைமைத்துவ பயிற்சி தொடர்பில் எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை வெளியிடுவதாக விவாததத்தில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க கூறினார்.

இதேவேளை, 22 அமைச்சுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்ட செயற்குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் யாப்பின் பிரகாரம் நிறுவப்பட்ட சில அதிகார சபைகளின் தலைவர்கள் இந்த குழுவின் விசாரணைகளில் பங்குகொள்ளவில்லை என அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்