பொது வேட்பாளரை தெரிவு செய்வதில் எதிர்க்கட்சி தோல்வி கண்டுள்ளது – நிமல் சிறிபால டி சில்வா

பொது வேட்பாளரை தெரிவு செய்வதில் எதிர்க்கட்சி தோல்வி கண்டுள்ளது – நிமல் சிறிபால டி சில்வா

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 8:54 pm

பொது வேட்பாளரை தெரிவுசெய்வதில் எதிர்க்கட்சி தோல்வி கண்டுள்ளதாக  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளர் இன்று அல்ல நாளை என பல வாரங்களாக எதிர்க்கட்சி மக்களுக்கு வழங்கிய எதிர்ப்பார்ப்புகள் தற்போது ஏமாற்றம் கண்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ என்பது முழு நாடும் அறிந்த விடயமாகும். அவரின் வெற்றிக்காக கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் முழு அளவில் செயற்பட்டு வருகின்றனர். ஆகவே எமது பொது வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்கு முன்னணி ரணில் விக்கிரமசிங்க முன்நிற்க கூடாது எனக் கூறுகின்றது. கரு ஜயசூரியவே தெரிவாக வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆகவே தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிலும் எதிரக்கட்சிகளுக்குள்ளும் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தற்போது வெளிப்பட்டுள்ளது. ஆகவே தேர்தல் நடவடிக்கைகள் சிக்கலுடன் ஆரம்பித்தால் அது தொடர்ந்தும் சிக்கலான நிலைக்கு கொண்டு செல்லும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்