பொது வேட்பாளராக கரு ஜயசூரிய நிறுத்தப்பட வேண்டும் – ஐக்கிய பிக்குகள் முன்னணி

பொது வேட்பாளராக கரு ஜயசூரிய நிறுத்தப்பட வேண்டும் – ஐக்கிய பிக்குகள் முன்னணி

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 9:30 pm

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜயசூரிய பொதுவேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவிக்கின்றது.

இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த முன்னணி இதனைக் குறிப்பிட்டது.

ஐக்கிய பிக்குகள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிராம்பே ஆனந்த தேரர் உள்ளிட்ட முன்னணியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

தேஷபந்து கரு ஜயசூரியவை ஐக்கிய பிக்குகள் முன்னணி முன்நிறுத்தியிருக்கின்றது. இந்த நாட்டை நிருவகிக்கக்கூடிய சிறந்த நபராக நாம் அவரைக் காண்கின்றோம். இதற்கான சரியான வேட்பாளர் தேஷபந்து கருஜயசூரிய தான். அவர் தான் 17ஆவது திருத்ததை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தவர். பாராளுமன்றத்தில் நடைபெறுகின்ற விடயங்களை வெளியில் உள்ள மக்கள் அறிந்துகொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தை அவர் தான் ஏற்படுத்திக்கொடுத்தார். பிரதித் தலைவராக இருந்து அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தை நிறைவு செய்தவர் அவர்தான். யுத்தத்தின் வீரர் அவர் தான் என நாம் நினைக்கின்றோம்.

[vimeo url=”https://www.youtube.com/watch?v=2dkboEjUtsY” width=”560″ height=”315″]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்