நாட்டிற்கு சாதகமான முக்கியத் தீர்மானமொன்று நாளை அறிவிக்கப்படும் – அத்துரலிய ரத்தன தேரர்

நாட்டிற்கு சாதகமான முக்கியத் தீர்மானமொன்று நாளை அறிவிக்கப்படும் – அத்துரலிய ரத்தன தேரர்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 9:56 pm

வெள்ளவத்தையில் நடைபெற்ற, ஜாதிக்க ஹெல உறுமயவின் மத்திய செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது.

கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடி, நாட்டிற்கு சாதகமானதும், மிக முக்கியமானதுமான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஜாதிக்க ஹெல உறுமயவின் தவிசாளர் அத்துரலிய ரத்தன தேரர் குறிப்பிட்டார்.

ஆயினும், குறித்த தீர்மானத்தை நாளை நாட்டிற்கு அறிவிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திவுலப்பிட்டிய பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியிலிருந்து இன்று  விலகிய அத்துரலிய ரத்தன தேரர், அதற்கான வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனத்தையும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிடம் கையளித்திருந்தார்.

தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பதவியில் இருந்து விலகியதன் பின்னர், அத்துரலிய ரத்தன தேரர் சுட்டிக்காட்டியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்