தேசிய அருங்காட்சியகத்தில் மீண்டும் திருடர்கள் கைவரிசை

தேசிய அருங்காட்சியகத்தில் மீண்டும் திருடர்கள் கைவரிசை

தேசிய அருங்காட்சியகத்தில் மீண்டும் திருடர்கள் கைவரிசை

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 7:15 pm

கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் மீண்டும் திருடர்கள் நுழைந்துள்ளதாக வெளியிடப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத்தின் மேல் மாடியில் காணப்படும் துணிகள் பிரிவின் கதவின் ஊடாக திருடர்கள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

நேற்றிரவு முதல் இன்று காலை 8 மணிக்கு உட்பட்ட காலப்பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றம் இடம்பெற்ற பகுதியை கண்காணிக்கும் உத்தியோகத்தர்களும், கைரேகை நிபுணர்களும்  அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

தேசிய அருங்காட்சியகத்தில் தற்போது திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்