ஜீ.எல்.பீரிஸிற்கு வெளிவிவகார அமைச்சில் நீடிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை – சஜித்

ஜீ.எல்.பீரிஸிற்கு வெளிவிவகார அமைச்சில் நீடிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை – சஜித்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 9:10 pm

ஜெனீவாவில் அமைந்துள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் புனரமைக்கப்பட்டபோது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ கருத்து தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

எமது தூதுவரின் வாசஸ்தலத்தை புனரமைக்கும் கோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தத்தினை, புலிகளுடன் தொடர்புடைய துரைராஜா என்ற வர்த்தகருக்கு தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு கையளித்துள்ளது. திறைசேரியில் உள்ள மக்களின் நிதியை ஜெனீவாவில் உள்ள புலி வர்த்தகர்களுக்கு கொடுப்பது, அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் ஒரு நடவடிக்கை அல்லவா?  இதனை புலிகளுடன் தொடர்புடைய ஒருவருக்கு யார் வழங்கியது என்பதை யார் கூறுவது? அரசியல்வாதிகள் அல்ல. அரசாங்கத்தின் தனியான கணக்காய்வு அறிக்கை ஒன்று உள்ளது. அரசாங்கத்தின் உயர்நிலை இராஜதந்திரிகள் சிலரே அந்த கணக்காய்வு அறிக்கையை தயாரித்துள்ளனர். ஆகவே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிற்கு தொடர்ந்தும் வெளிவிவகார அமைச்சில் நீடித்து இருப்பதற்கு தார்மீக உரிமை கிடையாது. நீங்கள் ஆரம்பித்த நாள் முதல் எமது நாட்டிற்கு அனைத்தும் அழிவாக மாறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்