ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணிலுக்கு துணிவில்லை – விநாயகமூர்த்தி முரளிதரன்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணிலுக்கு துணிவில்லை – விநாயகமூர்த்தி முரளிதரன்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 8:25 pm

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தவொரு வேட்பாளரும் இல்லை என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

[quote] இந்த நாட்டில் ஒரு தமிழனோ அல்லது முஸ்லிமோ ஜனாதிபதியாக வரமுடியாது. காரணம் 18 அல்லது 20 வீதமானவர்களே தமிழர்கள். எனவே 20 வீதமானவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதியை உருவாக்க முடியாது. 80 வீதமான பெரும்பான்மை மக்கள் தான் இருக்கின்றார்கள். அதில் நமது கடமை என்ன? வெல்லகூடிய ஜனாதிபதியை தெரிவுசெய்யவேண்டும்.  ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் பாராபட்சம் காட்டவேண்டியதில்லை.யாரோ ஒரு ஆள் இந்த நாட்டில் ஜனாதிபதியாக தானே போகிறார். இப்போ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோடு போட்டியிட இலங்கையில் ஒருத்தரும் இல்லை. இன்னும் ஒரு வேட்பாளரை கூட தெரிவுசெய்யவில்லை. உண்மையான எதிர்க்கட்சி இருந்தால் எதிர்க்கட்சி தலைவர் தானே போட்டியிடவேண்டும். ரணில் விகரமசிங்கவுக்கே துணிவு இல்லை. அவர் என்ன பார்க்கிறார். கடந்த முறையை போன்று சரத் பொன்சேக்காவை மாட்டினது போல இம்முறையும் நாம தோக்காம தப்பிருவோம் என்று பார்க்கிறார். அங்கால தேடி திரிகிறார்கள். இதுவரை ஒருவரையும் தெரிவுசெய்யவில்லை. [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்