இலங்கை தமிழ் அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது

இலங்கை தமிழ் அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது

இலங்கை தமிழ் அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 8:36 pm

தமிழகம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இலங்கையர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவுபெற்றுள்ளது.

இதற்கமைய உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் அகதிகளை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 31 இலங்கையர்கள் உள்ளிட்ட 32 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்தபோது கைதான பலரும் அங்கு தடுத்து வைக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனைத் தவிர விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றம் சுமத்தப்பட்ட சிலரும் குறித்த சிறையில் அடைக்கப்ப்டுள்ளதாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் 26 இலங்கையர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

அவர்களது கோரிக்கை மனுக்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக மத்திய சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்