இலங்கை அணியின் தோல்விக்கு கிரிக்கெட் நிறுவனமே பொறுப்பு- சபையில் குற்றச்சாட்டு

இலங்கை அணியின் தோல்விக்கு கிரிக்கெட் நிறுவனமே பொறுப்பு- சபையில் குற்றச்சாட்டு

இலங்கை அணியின் தோல்விக்கு கிரிக்கெட் நிறுவனமே பொறுப்பு- சபையில் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 2:29 pm

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் அடைந்த தோல்விகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

விளையாட்டுத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள்மீதான குழு நிலை விவாதத்தின்போது இலங்கை அணியின் தோல்விகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, இந்த தோல்விகளுக்கான பொறுப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் முறைகேடுகள் நிறைந்த நிறுவனமாக மாறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இந்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையில் சபையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சபையில் கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, இன்று கிரிக்கெட் விளையாட்டைப் போன்றே றக்பி விளையாட்டையும் மூன்று வீரர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முடியுமாயின் றக்பி விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சவால் விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்பாட்டை தடுப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே சபையில் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒலிம்பிக் பேரவையின் உறுப்பினர்களை  கோப் குழுவில் முன்னிலைப்படுத்துமாறு அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்