வில்லியர்ஸின் சாதனையை முறியடிப்பாரா கோஹ்லி?

வில்லியர்ஸின் சாதனையை முறியடிப்பாரா கோஹ்லி?

வில்லியர்ஸின் சாதனையை முறியடிப்பாரா கோஹ்லி?

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 4:10 pm

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 7,000 ஒட்டங்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையை தென்னாபிரிக்க அணித் தலைவர் ஏபிடி வில்லியர்ஸ் நிலைநாட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போதே அவர் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.

இதன்பிரகாரம் 166 இனிங்ஸ்களில் ஏபிடி வில்லியர்ஸ் 7,000 ஒட்டங்களைக் கடந்துள்ளார்.

இதற்கு முன்னர்  7,000 ஒட்டங்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி 174 இனிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டியிருந்தார்.

எனினும் 137 இன்னிங்ஸ்களில் 6,069 ஓட்டங்களைப் பெற்றுள்ள விராட் கோஹ்லி, இந்த சாதனையை விரைவில் முறியடிக்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்