வால் நட்சத்திர ஆய்வில் ஈடுபடும் ரோபா

வால் நட்சத்திர ஆய்வில் ஈடுபடும் ரோபா

வால் நட்சத்திர ஆய்வில் ஈடுபடும் ரோபா

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 4:33 pm

வால் நட்சத்திரத்தில் தரையிறங்கியுள்ள பிலே என்ற ஆய்வு ரோபோவின் செய்மதியுடனான தொடர்பு மீண்டும் கிடைத்துள்ளது.

வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இருந்து இந்த செய்மதி தரவுகளை அனுப்புவதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த ஆய்வு ரோபோவின் மின்கலம் செயலிழக்காலாம் என ஏற்பட்டிருந்த அச்சம்  இதன்மூலம் நீங்கியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிலையம் கூறியுள்ளது.

துளையிடுதன் மூலம் வால் நட்சத்திரத்தின் மாதிரிகளை பெற்று அவற்றை ஆய்வு செய்வதை பார்ப்பதற்கு விஞ்ஞானிகள் மிகவும் ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக கடந்த புதன் கிழமை பிலே என்ற குறித்த ஆய்வு ரோபோ வால் நட்சத்திரமொன்றில் தரையிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்