மரக்கறி விலைகளில் துரித அதிகரிப்பு

மரக்கறி விலைகளில் துரித அதிகரிப்பு

மரக்கறி விலைகளில் துரித அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 10:06 am

மரக்கறி விலைகள் துரிதகதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லீக்ஸ், கோவா, கெரட், உள்ளி்ட பல மரக்கறி வகைகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மலையகத்திலும் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மலையகத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜீ.குமாரசிறி குறிப்பிடுகின்றார்.

தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறி விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயினும், கொழும்பில் மரக்கறி வகைகளின் விலைகள் இன்று சற்று குறைவடைந்திருப்பதாக புறக்கோட்டை மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறி விநியோகம் அதிகரிப்பு மற்றும் விற்பனையில் வீழ்ச்சி ஆகிய காரணங்களால் கொழும்பில் மரக்கறி வகைகளின் விலையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்