மண்சரிவு அபாயத்தால் வலப்பனையில் 38 குடும்பங்கள் இடம்பெயர்வு

மண்சரிவு அபாயத்தால் வலப்பனையில் 38 குடும்பங்கள் இடம்பெயர்வு

மண்சரிவு அபாயத்தால் வலப்பனையில் 38 குடும்பங்கள் இடம்பெயர்வு

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 6:12 pm

மண்சரிவு அபாயம் காரணமாக வலப்பனை பலல்பதன பகுதியில் 38 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

38 குடும்பங்களைச் சேர்ந்த 168 பேர் இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜீ.குமாரசிறி குறிப்பிடுகின்றார்.

இந்த மக்கள் பிரதேசத்திலுள்ள விஹாரையொன்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் கூறினார்.

பலல்பதன பகுதியில் நேற்றிரவு சிறுசிறு மண்சரிவுகள் ஏற்பட்டமை பதிவாகியிருந்ததாகவும், அதுகுறித்து அறியக்கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு நேரில்சென்று பார்வையிட்டதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

அந்த பகுதியில் ஏற்கனவே அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய கட்டட ஆய்வு நிறுவக மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள் இன்று சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் குறித்து சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜீ.குமாரசிறி மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்