பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 20 பேர் விடுதலை

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 20 பேர் விடுதலை

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 20 பேர் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 2:57 pm

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 17 ஆம் திகதி ஆறு படகுகளுடன் பங்களாதேஷ் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் இருந்து வெளியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன், இந்த மீனவர்களை நாட்டிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த நாட்டிற்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் ஏ.ஜீ.அபேசேகர குறிப்பிடுகின்றார்.

அந்த நாட்டின் நீதிமன்ற தீர்ப்புக்கமைய மீனவர்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்காக பங்களாதேஷ் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சுகளின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், உரிய சட்ட நடவடிக்கைகளின் பிரகாரம் இலங்கை மீனவர்கள் 20 பேரையும் அடுத்த வாரமளவில் நாட்டிற்கு அனுப்பிவைக்க முடியும் என்றும் பங்களாதேஷுக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்