காணாமற் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க டிசம்பர் இறுதிவரை சந்தர்ப்பம்

காணாமற் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க டிசம்பர் இறுதிவரை சந்தர்ப்பம்

காணாமற் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க டிசம்பர் இறுதிவரை சந்தர்ப்பம்

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 6:39 pm

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை சமர்பிப்பதற்கு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் விரிவுபடுத்தப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக யுத்தம் இடம்பெற்றபோது இழைக்கப்பட்ட உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பிலும் மக்கள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடுகளை எழுத்துமூலம் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், அவற்றை ஆணைக்குழுவிடம் நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் ஊடாகவோ கையளிக்கலாம் என ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம்பவம் இடம்பெற்ற திகதி, இடம் ஆகியவற்றுடன், சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பான விபரங்களை முறைப்பாட்டுடன் இணைத்தல் சிறந்ததாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் சாட்சிப் பதிவுக்கான அமர்வு முறைப்பாட்டாளருக்கு வசதியான இடமொன்றில் நடத்தப்படும் என எச்.டபிள்யூ.குணதாஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்