ஐபில் போட்டிகளில் இடம்பெற்ற முறைகேடுகளில் குருநாத் மெய்யப்பனுக்கு பங்குண்டு; முத்கல் குழு அறிக்கை

ஐபில் போட்டிகளில் இடம்பெற்ற முறைகேடுகளில் குருநாத் மெய்யப்பனுக்கு பங்குண்டு; முத்கல் குழு அறிக்கை

ஐபில் போட்டிகளில் இடம்பெற்ற முறைகேடுகளில் குருநாத் மெய்யப்பனுக்கு பங்குண்டு; முத்கல் குழு அறிக்கை

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 12:13 pm

இந்தியன் பிறிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியான குருநாத் மெய்யப்பனின் பங்கு நிரூபிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் நியமித்த  ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையிலான  குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்தயம் மற்றும் தகவல்களை பரிமாற்றியமை போன்ற அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் ஆட்டநிர்ணத்தில் அவர் ஈடுபட்டாரா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என முத்கல் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்ரா மீதான பந்தயம் மற்றும் ஆட்டநிர்ணயக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்