இந்தோனோஷியாவில் நிலஅதிர்வு; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

இந்தோனோஷியாவில் நிலஅதிர்வு; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

இந்தோனோஷியாவில் நிலஅதிர்வு; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 9:40 am

இந்தோனேஷியாவின் மலுக்கூ கடற்பரப்பில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வின் பின்னர் அதனை அண்மித்த வலயத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அனர்த்தம் ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் தூரமான பரப்பிற்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியதை அடுத்து, இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லையென திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர். ஜயசேகர கூறினார்.

கடலின் 46 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதுடன், இதனால் எவ்வித உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது நில அதிர்வின் பின்னர் இந்தோனேஷியாவை அண்மித்த கடலில் 6.2 ரிக்டர் அளவிலான மற்றுமொரு நில அதிர்வு பதிவாகியதாக பிபிசி மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்