இந்திய எல்லையில் பாகிஸ்தான் படையினருக்கு சீன இராணுவம் பயிற்சி

இந்திய எல்லையில் பாகிஸ்தான் படையினருக்கு சீன இராணுவம் பயிற்சி

இந்திய எல்லையில் பாகிஸ்தான் படையினருக்கு சீன இராணுவம் பயிற்சி

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2014 | 12:45 pm

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினருக்கு சீன இராணுவம் ஆயுதப் பயிற்சி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுக்கு எல்லைப் பாதுகாப்பு படை இந்த தகவலைக் கூறியுள்ளதாக இரகசிய அறிக்கையொன்றில் மூலம் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீரில் சீன இராணுவத்தின் பிரச்சன்னத்தை அவதானிக்க முடிவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு அனுப்பியுள்ள இந்த இரகசிய புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முக்கிய பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் சடுதியாக அதிகரித்த இருதரப்பு மோதல்களால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சீனா இராணுவத்தால் வழங்கப்படும் இந்தப் பயிற்சிகள் இந்தியாவிற்கு பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்