வெள்ளத்தில் மூழ்கியது கொழும்பு நகரின் சில வீதிகள்

வெள்ளத்தில் மூழ்கியது கொழும்பு நகரின் சில வீதிகள்

வெள்ளத்தில் மூழ்கியது கொழும்பு நகரின் சில வீதிகள்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 7:26 pm

கொழும்பு நகரில் பெய்யும் பலத்த மழையினால், சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொரளை வீதி, வேல்ஸ் குமார வீதி, ஆமர் வீதி, பாபர் வீதி, தேவி பாலிகா சுற்றுவட்டம், விஜேராம பிளேஸ் ஆகிய வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

அத்துடன், கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கிரிபத்கொடை முச்சந்தியில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, மலையகத்தில் சில பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்வுவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்