விஜய் 58 பாடல் ரகசியம் வெளியானது!

விஜய் 58 பாடல் ரகசியம் வெளியானது!

விஜய் 58 பாடல் ரகசியம் வெளியானது!

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 11:46 am

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா , ஸ்ரீதேவி , சுதீப் நடித்து வரும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

விஜயின் 58ஆவது படம் என்பதனால் அதனை ‘விஜய் 58’ என்றே அழைக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, பண்ணையூர் அருகே போடப்பட்டுள்ள மாபெரும் படபிடிப்பு தளத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இப்படம் குறித்து தினந்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

titled-1

அதில் தற்போது புதிய செய்தியாக ஹன்சிகா தனது ட்விட்டர் தளத்தில் ” அதிகாலை, இளவரசி கெட்டப், மேக்கப் , ஹேர், க்ளேம் அப், விஜய் 58” என ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படப்பிடிப்பில் மேக்கப் செய்துகொள்ளும் புகைப்படம் ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

unnamed

இன்ஸ்டாக்ராமில் இளவரசி போன்ற தோற்றத்தில் ஒரு புகைப்படத்தினையும் ஹன்சிகா வெளியிட்டுள்ளார்.

பிரம்மாண்ட படபிடிப்பு தளத்தில் ஒரு பாடல் படமாக்கப்படுவதாக சொல்லப்படும் ‘விஜய் 58’ படத்தின் பாடலில் ஹன்சிகா, விஜய் இருவரும் ராஜா – ராணி பாணியில் உடையணிந்து நடனமாட இருப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்