வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக மிச்சேல் ஜோன்சன் தெரிவு

வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக மிச்சேல் ஜோன்சன் தெரிவு

வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக மிச்சேல் ஜோன்சன் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 6:30 pm

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இவ்வாண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மிச்சேல் ஜோன்சனின் சிறப்பான பந்துவீச்சு மூலம் இறுதியாக நடைபெற்ற ஆஷஷ் தொடரை 5 – 0 என்ற ஆட்டக்கணக்கில் அவுஸ்திரேலிய அணி வெற்றிகொண்டிருந்தது.

2013 ஆகஸ்ட் தொடக்கம் 2014 செம்டெம்பர் வரையான காலப் பகுதியில் 59 டெஸ்ட் விக்கெட்டுக்களை மிச்சேல் ஜோன்சன் வீழ்த்தியுள்ளார்.

இந்த விருதுக்கு இலங்கை அணியின் குமார் சங்க்கார, அஞ்ஜலோ மெத்தியூஸ் மற்றும் தென்னாபிரிக்காவின் ஏ பி டி வில்லியஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.

Bhuvneshwar-Kumar-of-India-celebrates-dismissing-England-captain-Alastair-Cook-23

சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதை தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ்சும் , மக்கள் தெரிவு வீரருக்கான விருதை இந்தியாவின் புவனேஸ்வர் குமாரும் வெற்றிகொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்