யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் புதிய கடுகதி ரயில் சேவை

யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் புதிய கடுகதி ரயில் சேவை

யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் புதிய கடுகதி ரயில் சேவை

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 9:52 am

கொழும்பு – கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இன்றிரவு முதல் புதிய கடுகதி ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படவுள்ள புதிய கடுகதி ரயில், மறுநாள் காலை 6.55 க்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்னாயக்க குறிப்பிடுகின்றார்.

இந்த கடுகதி ரயில், கோட்டையில் இருந்து கிளிநொச்சி வரை கடுகதி ரயிலாக பயணிக்கவுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரை சகல ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நிறுத்தப்படும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்