மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு அபாயம்; ஆய்வுகளை முன்னெடுக்க நடவடிக்கை

மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு அபாயம்; ஆய்வுகளை முன்னெடுக்க நடவடிக்கை

மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு அபாயம்; ஆய்வுகளை முன்னெடுக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 3:31 pm

மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள பகுதியில் மண்சரிவு தொடர்பான ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவக உத்தியோகத்தர்கள் குறிப்பிட்ட பகுதியில் மண்சரிவு தொடர்பான ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார குறிப்பிடுகின்றார்.

ஆய்வின் பின்னர் உடனடியாக அதுகுறித்து மாவட்ட செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அபாயம் நிலவியுள்ள பகுதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே, தற்போது தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்படும் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளதன் காரணமாக, 156 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் கொஸ்லாந்தை ஸ்ரீகணேசா தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் பிரதேச செயலகம், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்