புத்தளம் கரம்பை பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

புத்தளம் கரம்பை பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

புத்தளம் கரம்பை பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 2:38 pm

புத்தளம் கரம்பை பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது..

துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

துப்பாக்கி பிரயோகத்தினால் வர்த்த நிலையத்தின் கதவுகள் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காணி பிரச்சினையொன்று தொடர்பில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கிலேயே இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்