பாடசாலை அதிபரைத் தாக்கியமை தொடர்பில் கெக்கிராவை பிரதேச சபையின் உப தலைவர் கைது

பாடசாலை அதிபரைத் தாக்கியமை தொடர்பில் கெக்கிராவை பிரதேச சபையின் உப தலைவர் கைது

பாடசாலை அதிபரைத் தாக்கியமை தொடர்பில் கெக்கிராவை பிரதேச சபையின் உப தலைவர் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 2:32 pm

அதிபர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் கெக்கிராவை பிரதேச சபையின் உப தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெக்கிராவை பிரதேச சபையின் உப தலைவர், நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் பாடசாலை அதிபரைத் தாக்கியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் உப தலைவர் இன்று பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளித்தபோது, கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பாடசாலை அதிபர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து கெக்கிராவை நகரில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்