14 சிங்கங்களுடன் போராடி தப்பிய யானை (Watch Video)

14 சிங்கங்களுடன் போராடி தப்பிய யானை (Watch Video)

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 12:27 pm

தென்னாப்ரிக்காவின் வனப்பகுதியில் சம்பியா என்ற இடத்தில் ஒரு வயதே ஆன குட்டி யானை, தன்னை கோரப் பசியுடன் தாக்கிக் கொல்ல முயன்ற 14 சிங்கங்களின் பிடியில் இருந்து போராடி தப்பியிருக்கிறது. வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற பயணிகளால் இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு குட்டி யானையை 14 சிங்கங்கள் சுற்றி வளைத்து தாக்குகின்றன. ஒரு சிங்கம், அந்த குட்டி யானையின் மீது ஏறி அதனை கடித்துக் குதறுகிறது. முதலில் சிங்கங்களின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் திணறும் குட்டி யானை, பிறகு சினிமா ஹீரோ போல வீறுகொண்டு எழுந்து சிங்கங்களை அடித்து விரட்டுகிறது.

ஒவ்வொரு சிங்கத்தையும் விரட்டிவிட்டு, அங்குள்ள நீர்நிலைக்குள் இறங்கும் யானை, தன் மீதிருந்த சிங்கத்தையும் விரட்டி விட்டு தப்பிச் செல்கிறது.

yaanai1


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்