நீர்கொழும்பு, கொச்சிக்கடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

நீர்கொழும்பு, கொச்சிக்கடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

நீர்கொழும்பு, கொச்சிக்கடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 9:23 am

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு 7.45 அளவில் இடம்பெற்றுள்ளது.

வெலேகட பகுதியிலிருந்து கடவலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியைவிட்டு விலகி மின்கம்பத்தில் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

விபத்தில் பாதசாரி ஒருவரும், மோட்டார் சைக்கிளின் பின்புறமாக அமர்ந்திருந்த இளைஞனும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இருவரும் அகரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் 17 மற்றும் 18 வயதுகளிலான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்