நாட்டைப் பாதுகாப்பதற்காகவே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டைப் பாதுகாப்பதற்காகவே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டைப் பாதுகாப்பதற்காகவே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 10:48 am

நாட்டைப் பாதுகாப்பதற்காகவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை பயன்படுத்தியதாகவும், அன்றி நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்காக அல்லவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

கண்டியில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தெரிவித்த கருத்து:-

“நாட்டைப் பாதுகாப்பதற்கு தேசிய பாதுகாபபை உறுதி செய்வதற்குமே நான் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தினேன். நாட்டின் பொருளாதாரத்தையும். வெளிநாட்டு அழுத்தங்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கும் நிறைவேற்று அதிகாரத்தின் படைத்தளபதி அதிகாரத்தைப் பயன்படுத்தினேன். இதில் நான் நாட்டைக் காட்டிக்ெகாடுப்பதற்கு ஒப்பந்தம் செய்யவில்லை. நான் நாட்டுப் பொலிஸார் 600 பேருக்கு மரண் தண்டனைக்கு கைச்சாத்திடவில்லை. கீழ்படியுமாறு கைச்சாத்திடவில்லை. வௌ்ளைக்கொடிகளை எடுத்துச் சென்று கீழ்படியுமாறு நான் கூறவில்லை. பொலிஸ் அதிகாரிகளை புலிகள் இயக்கத்தின் பெண்கள் நிர்வாணமாக்கி துப்பாக்கிப் பிரயோகம் ​மேற்கொண்டனர். நிறைவு செய்ய முடியாது என்று கூறிய தீவிரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் நிறைவு செய்வதற்கு நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுததியது உண்மை. நாட்டின் சீர்கேட்டுக்கும் நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கும் நான் ஒருபோதும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை.”

ஹதபிம அதிகாரசபை ஏற்பாடு செய்திருந்த பசுமை எழுச்சி விவசாய மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று கண்டியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர். டி.எம் ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விவசாயப் பரிதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

மத்திய மாகாண விவசாயிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்