கெக்கிராவை பிரதேச சபையின் உப தலைவர் பிணையில் விடுதலை

கெக்கிராவை பிரதேச சபையின் உப தலைவர் பிணையில் விடுதலை

கெக்கிராவை பிரதேச சபையின் உப தலைவர் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 7:31 pm

அதிபர் ஒருவரைத் தாக்கிய சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட கெக்கிராவை பிரதேச சபையின் உப தலைவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் அதிபர், இந்த விடயம் தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான தேவை காணப்படவில்லை என பொலிஸிற்கு தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கெக்கிராவை பிரதேச சபையின் உப தலைவர், நேற்று பிற்பகல் 3 மணியளவில் பாடசாலை அதிபரைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, பாடசாலை அதிபர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து கெக்கிராவை நகரில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்