குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 9:38 am

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைக்குழி தொடர்பிலான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரால் குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டிருந்தது.

இந்த மனு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற விசாரணையை அடுத்து, நேற்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

புதைகுழி தோண்டுவதற்கான ஏற்பாடுகள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதன் பிரகாரம் பொலிஸார் நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை சமர்பித்தனர்.

இதனையடுத்து குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி வரை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்