கடந்த வருடம் அரச நிறுவனங்களால் 4020 கோடி ரூபா நட்டம் -கோப் குழு

கடந்த வருடம் அரச நிறுவனங்களால் 4020 கோடி ரூபா நட்டம் -கோப் குழு

கடந்த வருடம் அரச நிறுவனங்களால் 4020 கோடி ரூபா நட்டம் -கோப் குழு

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2014 | 7:02 pm

மூன்று அரச நிறுவனங்களில் கடந்த வருடம் 4020 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர், சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

கோப் குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய கடதாசி நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் ஆகியன இவ்வாறு நட்டமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரச நிறுவனமொன்றின் தலைவரையும், மற்றுமொரு முக்கிய முகாமையாளரையும் நீக்குமாறு கோப் குழு முன்வைத்த பரிந்துரையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்