Update : துப்பாக்கிச் சூட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு

Update : துப்பாக்கிச் சூட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு

Update : துப்பாக்கிச் சூட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 7:07 pm

மன்னார் வெள்ளாங்குளம் கணேசபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 8.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கிருஷ்ணசாமி புகுனேஷ்வரன் என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரழந்தவர் புணர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர், அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இலுப்பைகடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்