ரோஹித் சர்மா இலங்கை அணிக்கு எதிராக உலக சாதனை

ரோஹித் சர்மா இலங்கை அணிக்கு எதிராக உலக சாதனை

ரோஹித் சர்மா இலங்கை அணிக்கு எதிராக உலக சாதனை

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 5:12 pm

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக ஒட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை இந்தியாவின் ரோஹித் சர்மா நிலைநாட்டியுள்ளார்.

இலங்கை அணிக்கெதிரான நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 264 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய அணி வீரர் விரேந்தர் சேவாக் பெற்ற 219 ஓட்டங்களே இதுவரை சாதனையாக இருந்து வந்திருந்தது.

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரண்டாவது இரட்டைச் சதமடித்த ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

173 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா 33 நான்கு ஓட்டங்களையும் 9 ஆறு ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.

ரோஹித் சர்மா இதற்கு முன்னர் 209 ஓட்டங்களைப் பெற்று தனது முதலாவது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்