ரோஹித் சர்மாவின் ஓட்டத்தைக்கூட கடக்கத் தவறிய இலங்கை; நான்காவது போட்டியிலும் படுதோல்வி

ரோஹித் சர்மாவின் ஓட்டத்தைக்கூட கடக்கத் தவறிய இலங்கை; நான்காவது போட்டியிலும் படுதோல்வி

ரோஹித் சர்மாவின் ஓட்டத்தைக்கூட கடக்கத் தவறிய இலங்கை; நான்காவது போட்டியிலும் படுதோல்வி

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 9:12 pm

இலங்கை அணிக்கெதிரான நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 151 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 405 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.1 ஓவர்களில் 251 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அஞ்சலேரா மெத்யூஸ் 75 ஓட்டங்களையும், லஹிலரு திரிமான்ன 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். தவால் குல்கர்னி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் ஷர்மா பெற்ற இரட்டை சதத்தின் உதவியுடன் 404 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியில் 264 ஓட்டங்களைப் பெற்ற ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டியொன்றில் அதிகூடிய ஒட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.

போட்டியின் நாயகனாக ரோஹித் சர்மா தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்