மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 மாதங்களில் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 மாதங்களில் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 மாதங்களில் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 8:13 am

கொஸ்லாந்தை மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு  மூன்று மாதங்களுக்குள் வீடுகளை நிர்மாணித்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக பதுளை மாவட்ட செயலாளர் ரோஹண திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் பண்டாரவளையில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக பதுளை மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

பதுளை மாவட்டத்தில் இதுவரையும் மண்சரிவு அபாயமுள்ள 65 இடங்களை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மக்களுக்கு மாற்றுகாணிகள வழங்குவதற்கான இடங்கள் தற்போது அடையாளங்காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார்.

இதற்காக பௌதீக திட்டமிடல் பிரிவு மற்றும் தேசிய கட்டட ஆய்வு நிலையம் ஆகியவற்றின் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் முதற்கட்டமாக 75 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதேபோன்று, அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கின்றவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களில் இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மண்சரிவு அபாயமுள்ளவர்களுக்காகவும், தோட்டத் தொழிலாளர்களுக்காகவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள 50 இலட்சம் வீட்டுத் திட்டம் எதிர்வரும் காலங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் பதுளை மாவட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்பதாயிரம் வீடுகளை அமைத்துதருமாறு கோரியுள்ளதாகவும் பதுளை மாவட்ட செயலாளர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார்.

அவற்றில் தற்போது மண்சரிவு அபாயமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் பதுளை மாவட்ட செயலாளர் ரோஹண திஸாநாயக்க குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்