மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களின் 16ஆவது நாள் நிறைவையொட்டி மத அனுஷ்டானங்கள்

மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களின் 16ஆவது நாள் நிறைவையொட்டி மத அனுஷ்டானங்கள்

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 9:50 pm

​கொஸ்லாந்தை – மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி சர்வமத அனுஷ்டானங்கள் இன்று இடம்பெற்றன.

சர்வமதத் தலைவர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்வில் உறவுகளை இழந்த உறவினர்கள் உணர்வு பூர்வமாக கலந்துக் கொண்டிருந்தனர்.

கொஸ்லாந்தை – மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களின் 16ஆவது நாள் நிறைவையொட்டி பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று சர்வமத அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.

காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் கலந்துக் கொண்டு உயிரிழந்வர்களுக்கு சாந்தி வேண்டி மத அனுஷ;டானங்களில் ஈடுப்பட்டனர்.

மண்சரிவில் உயிரிழந்த மற்றும் காணாமற்போனவர்களை நினைவுக் கூர்ந்து முதலில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதலில் இந்து முறைப்படியும் பின்னர் ஏனைய மத முறைமைகளுக்கு அமைவாகவும் கொஸ்லாந்தை – மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்தியை வேண்டியும் மத அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்