மீனவ படகுகளுக்கு செய்மதி கண்காணிப்பு கட்டமைப்பை பொருத்துவதற்கு நடவடிக்கை

மீனவ படகுகளுக்கு செய்மதி கண்காணிப்பு கட்டமைப்பை பொருத்துவதற்கு நடவடிக்கை

மீனவ படகுகளுக்கு செய்மதி கண்காணிப்பு கட்டமைப்பை பொருத்துவதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 9:56 am

நாட்டிலுள்ள மீனவ படகுகளுக்கு செய்மதி கண்காணிப்பு கட்டமைப்பை பொருத்துவதற்காக டென்மார்க் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் 3 ஆயிரம் படகுகளுக்கு அடுத்த வருடம் இந்த தொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்து சமுத்திரத்தின் டுனா ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைக்கு அமைய பொருத்தப்படவுள்ள இந்த கட்டமைப்பு தொடர்பான உடன்படிக்கை கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

மீனவ படகுகளுக்கு இந்த கண்காணிப்பு கட்டமைப்பை பொருத்துவதன் மூலம் அவற்றின் நகர்வினை கண்காணிக்க முடியும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்