ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்ற ஆவணத்தை சமர்பிக்குக – ஜோன் அமரதுங்க

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்ற ஆவணத்தை சமர்பிக்குக – ஜோன் அமரதுங்க

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 9:23 pm

மூன்றாவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான இயலுமை தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆவணத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க இன்று வேண்டுகோள் விடுத்தார்.

[quote]உண்மையில் கூறுவதென்றால் அதனை உங்களுக்கு அனுப்பி நீங்கள் சபையில் கூறியிருந்தால் அதற்கு அதிக பெறுமதி இருந்திருக்கும். அனுமதி வழங்கியுள்ளதாக வெறுமனே இரண்டு வரிகளை சபை முதல்வர் கூறினார். அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் எழுந்த ஒரு பிரச்சினையே இதுவாகும். அந்த அரசியமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது. எனவே அந்தக் கருத்தைக் கூறும் முழுமையான ஆவணத்தை சபையில் சமர்பிக்க வேண்டும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்