மினுவாங்கொடை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

மினுவாங்கொடை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

மினுவாங்கொடை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 1:06 pm

மினுவாங்கொடை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த முகமூடியணிந்த இருவர் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் வாகனங்களுக்கும் சேதமேற்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், கொள்ளையிட்ட பணத்தின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை.

சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்