மாணவர்கள் சிலரை பகிடிவதைக்கு உள்ளாக்கிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத் தடை

மாணவர்கள் சிலரை பகிடிவதைக்கு உள்ளாக்கிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத் தடை

மாணவர்கள் சிலரை பகிடிவதைக்கு உள்ளாக்கிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத் தடை

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 7:57 pm

மாணவர்கள் சிலரை பகிடிவதைக்கு உட்படுத்திய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ பீடத்தின் 10 மாணவர்களுக்கே வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி மஞ்சுள சுமித் தெரிவிக்கின்றார்.

புதிய மாணவர்கள் சிலரை பழைய மாணவர்கள் கடந்த 6ஆம் திகதி பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் அறியக்கிடைத்ததை அடுத்து விரிவுரையாளர்கள் புதிய மாணவர்களை காப்பாற்றியுள்ளனர்.

பகிடிவதை சம்பவத்துடன் மேலும் சில சிரேஷ்ட மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட மாணவ ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள 10 மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிவிற்கமைய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பேராசிரியர் மஞ்சுள சுமித் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்