மகாராஷ்டிரா சட்ட மன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி

மகாராஷ்டிரா சட்ட மன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி

மகாராஷ்டிரா சட்ட மன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 8:23 am

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

சட்டமன்றத் தலைவராக பாரதீய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஹரிபாவ் பக்தே போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

மகாராஷ்டிர சட்டமன்ற வாக்கெடுப்பில் எதிர்கட்சியாக செயற்பட்டதால்,  தலைவர் பதவிக்கான தமது உறுப்பினர்களை சிவசேனா கட்சியும், காங்கிரஸூம் மீள அழைத்துக்கொண்டன.

இதையடுத்து ஹரிபாவ் பக்தே, சட்டமன்றத் தலைவராக போட்டியின்றி  தெரிவுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன.

எனினும் வாய்மொழிமூலமான கருத்துக் கணிப்பிலும், பாரதீய ஜனதாக் கட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஆளுநரிடம் கோரப்போவதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

அத்துடன், மின்னணு இயந்திரம் மூலமாக வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை சட்டமன்றம்  செயல்பட அனுமதிக்க போவதில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்