பாணந்துறை நகர சபைத் தலைவர் நந்தன குணதிலக கூட்டமைப்பிலிருந்து வெளியேற தீர்மானம்

பாணந்துறை நகர சபைத் தலைவர் நந்தன குணதிலக கூட்டமைப்பிலிருந்து வெளியேற தீர்மானம்

பாணந்துறை நகர சபைத் தலைவர் நந்தன குணதிலக கூட்டமைப்பிலிருந்து வெளியேற தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 7:27 pm

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலாவது தவிசாளரும், பாணந்துறை நகர சபையின் தலைவருமான நந்தன குணதிலக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளார்.

இதுகுறித்து நந்தன குணதிலக்கவிடம் வினயபோது, ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் எதிர்காலத்தில் எதிர்கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் நந்தன குணதிலக்க குறிப்பிடுகின்றார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளராக செயற்பட்டுவந்த அவர், களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1994 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

நந்தன குணதிலக்க, இடதுசாரி கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தி ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலலில் களமிறங்கியிருந்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் பிரதம செயலாளர் பதவியை வகித்த நந்தன குணதிலக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், தபால் துறை அமைச்சராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துகொண்ட நந்தன குணதிலக்க, பாணந்துறை நகர சபையின் தலைவராக தற்போது செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்