துறைமுக கொள்கலன் வாகன ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

துறைமுக கொள்கலன் வாகன ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

துறைமுக கொள்கலன் வாகன ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 10:31 pm

கொழும்பு துறைமுக கொள்கலன் வாகன ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

துறைமுக கொள்கலன் வாகன சாரதிகளும், உதவியாளர்களும் இங்குருகடை சந்தி ஊடான துறைமுக நுழைவாயிலை மறித்து நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

துறைமுக சுங்கம் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்