ஜெயலலிதா 10 வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது; சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவு

ஜெயலலிதா 10 வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது; சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவு

ஜெயலலிதா 10 வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது; சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 4:03 pm

அண்ண திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 10 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, இந்த விடயம் தமிழக அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் பதவியுடன் ஸ்ரீரங்கம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது தகுதியிழப்பு குறித்து முறையான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 8ஆம் தினதி தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி முதல், தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்படுவதோடு, தண்டனைக்காலம் முடிந்த பிறகு அடுத்து வரும் 6 வருடங்களுக்கும் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார். என அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில், மேன்முறையீட்டு மனுக்களில் விடுதலை அல்லது தண்டனையில் மாற்றங்கள் ஏற்படாதவிடத்து தற்போதைய உத்தரவின்படி ஜெயலலிதா 10 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்