சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் 8 வயது இந்தியச் சிறுவனின் உரை

சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் 8 வயது இந்தியச் சிறுவனின் உரை

சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் 8 வயது இந்தியச் சிறுவனின் உரை

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 6:12 pm

உலகளவில் சைபர் குற்றங்களை தடுப்பது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதுடெல்லியில் ”சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு” நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது மாணவன் சைபர் பாதுகாப்பு குறித்து பேச இருக்கிறார்.

உலகளவில் இணையம் மூலமாக பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இத்தகைய சைபர் குற்றங்களை தடுக்கும் நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்கான சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது.

இம்மாநாட்டின்  இரண்டாம் நாளான நாளைய தினம் சைபர் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது சிறுவன் ரூபன் போல் உரை நிகழ்த்தவுள்ளார். இவரது தந்தை மனோ போல், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபன் போல், கணனி மூலம் சைபர் குற்றங்களைத் தடுப்பது குறித்தும், ஒட்டுமொத்த கணனி தொடர்பான சைபர் குற்றங்களை அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியும் திறன்கள் குறித்து கடந்த மாதம் ஹுஸ்டன் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றியுள்ளார்.

சைபர் குற்றங்கள் தடுப்பது குறித்து புதிய மென்பொருள்களை உருவாக்கி வரும் ரூபன் போல் தனது தந்தையுடன் இணைந்து கணனி விளையாட்டுக்களை  உருவாக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்