இரத்தினபுரியில் மண்சரிவு அபாயம்; 25 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

இரத்தினபுரியில் மண்சரிவு அபாயம்; 25 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

இரத்தினபுரியில் மண்சரிவு அபாயம்; 25 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2014 | 7:56 am

மண்சரிவு அபாயம் காரணமாக இரத்தினபுரி, கொலன்ன பகுதியில் 25க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொலன்ன, ஹேய்ஸ் தோட்டத்திலுள்ள இரண்டு லைன் குடியிருப்புகள் மீது நேற்று பிற்பகல் சிறியளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, அபாயத்தை எதிர்நோக்கியிருந்த சுமார் 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் லைன் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அருகிலுள்ள பாடசாலையொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிக முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு, கொலன்ன பிரதேச செயலாளர் ஊடாக நிவாரண உதவிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்