ஷமீர் ரசூல்டீனுக்கு சர்வதேச இளையோர் சம்மேளன விருது

ஷமீர் ரசூல்டீனுக்கு சர்வதேச இளையோர் சம்மேளன விருது

ஷமீர் ரசூல்டீனுக்கு சர்வதேச இளையோர் சம்மேளன விருது

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2014 | 6:43 pm

இலங்கையில் பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்திய 10 இளைஞர்கள் சர்வதேச இளையோர் சம்மேளனத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற விருது வழங்கல் விழாவில், நியூஸ்பெஸ்ட் ஆங்கில செய்திப் பிரிவின் பணிப்பாளர் ஷமீர் ரசூல்டீன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை சர்வதேச இளையோர் சம்மேளனம் 1954ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன், திறமையான இளைஞர்களுக்கான விருது 1980ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஊடகத் துறையில் சேவையாற்றியமைக்காக ஷமீர் ரசூல்டீனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் இந்த விருதினை கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் ஷெவான் டேனியல், யசரத் கமல்சிறி, ஷக் என்றழைக்கப்படும் ரியாஸ்டீன் சாஜஹான் மற்றும் கிங்ஸ்லி ரத்நாயக்க ஆகியோர் பெற்றிருந்தனர்.

இதனைத்தவிர, இந்த சர்வதேச விருதினை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜோன் எப் கென்னடி, பில் கிளின்டன் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹென்றி கிசின்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்